ஈஷா யோகா மைய கட்டிடங்கள் அமைக்க ஏர்க்கர் கணக்கில் நிலம் அபகரிப்பு.! சிக்கலில் மாட்டிக்கொண்ட சத்குரு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், யோகாவிற்கு பெயர் போன ஈஷா யோகா, சதகுரு ஜக்கி வாசுதேவ் என்பவரால் உருவாக்கப்பட்டு நடைபெற்று வந்தது. கோவை மாவட்ட எல்லையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சென்று முகாமிட்டு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவை மாவட்டத்தில், ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வெள்ளயங்கிரி மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த யோகா மையம் அரசின் அனுமதி பெறாமல் வனத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து, அந்தப் புகாரில்,  ஈஷா அறக்கட்டளை பூலுவாப்பட்டி கிராமத்தில் 32,856 சதுர அடி பரப்பளவில் பல கட்டடங்களை கட்ட கிராமப்புற பஞ்சாயத்து அனுமதி பெற்றுள்ளது. மேலும் இது 1994 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நடந்துள்ளது  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொர்பாக மலை பாதுகாப்பு குழுவினரிடமிருந்து எந்த விதமான தடையில்லா சான்றிதழும் பெறாமலேயே இந்த கட்டடங்களை கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த 2017 ஆண்டு நடந்த சிவராத்திரி அன்று,  ஈஷா யோகா மையத்திற்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கு எழும்பிய மிகப்பெரிய சிவன் சிலையைத் திறந்து ஆன்மீக உரை எழுப்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.

English Summary

sathguru landed by land Arguing


Loading...


Get Newsletter

Seithipunal