எவ்வளவுதான் பொறுப்பது! அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! செய்வதறியாது நின்ற காவல்துறை மற்றும் அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் மணல் திருட்டு கண்கூடாகவே நடந்து வருகிறது. டாஸ்மாக் பிரச்சனைக்கு அடுத்து தமிழகத்தின் பெரும் தலைவலியாக இருப்பது மணல்கொள்ளை தான். கிராம கிரமாக பொதுமக்கள் மணல் கொள்ளைக்கு எதிராகவும், மணல் குவாரிகளை மூட கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் செய்துவருகின்றனர்.

இவர்களின் ஒரே கோரிக்கை, ''எங்கள் பகுதியில் உள்ள மணலை எடுத்துவிட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நாங்கள் குடிக்க தண்ணீருக்கு எங்கு செல்வோம். அதனால் மணல் அள்ளுவதை நிறுத்துங்கள்'', என்பதே ஆகும்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த ஆத்துப்பட்டியில் முறைகேடாக மணல் கடத்தி செல்வதாகக் கூறி லாரிகளை சிறைபிடித்த அந்த கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆத்திரம் அடைந்த அம்மக்கள், சில லாரிகளின் கண்ணாடிகளை மக்கள் அடித்து உடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவஇடத்துக்கு வந்த கோட்டாட்சியர் ஜெயபாரதி, மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானபடுத்த முற்பட்டனர். அப்போது அங்கிருந்த முதியவர் ராஜகோபால் என்பவர், கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியமால் கோட்டாட்சியரும், போலீசாரும் திகைத்து போய் நின்றனர்.

இதனையடுத்து இந்த மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர்.

English Summary

sand mafia lorry damaged


Loading...


Get Newsletter

Seithipunal