வெட்கமில்லை.. இங்கு யாருக்கும் வெட்கமில்லை! ரஜினியை பங்கமாய் வச்சு செய்யும் பாமக தலைவர் ராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை  திரும்ப செலுத்தாத விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

 கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் ஆட் பியூரோ நிறுவனத்திடம்  ரூ.10 கோடி கடன் வாங்கியதாகவும் அதில் முழு பணத்தை இன்னும் செலுத்தவில்லை எனவும் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கடைசி கெடு விதித்தும் லதா ரஜினிகாந்த்  கடன் பாக்கியை செலுத்தவில்லை. 
 latha rajinikanth க்கான பட முடிவு

இது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் கடன் பாக்கியை ஏன் செலுத்தவில்லை என லதா ரஜினிகாந்திற்கு கேள்வி எழுப்பினர். மேலும், ஜூலை 10ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 
 இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 2முறை அவகாசம் கொடுத்தும் கடனை செலுத்தவில்லை. இதுகுறித்த வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்க்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

                rajinikanth with ramadoss க்கான பட முடிவு
 
இதற்கு இன்று மீண்டும் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உச்சநீதிமன்றம் கூறியதை தலைப்புடன் பதிவிட்டுள்ளார். அதாவது வெட்கமில்லை.... இங்கு யாருக்கும் வெட்கமில்லை என்ற ஆரம்பத்துடன் பதிவிட்டுள்ளார். 

English Summary

ramadoss teasing rajinikanth in twitter


Loading...


Get Newsletter

Seithipunal