தமிழக தண்ணீர் பஞ்சத்துக்கு விடிவு..? வட திசையோடு மேற்கிலிருந்தும் தமிழகத்துக்கு கொட்டிக் கிடைக்குது: காவிரியை விஞ்ச பார்க்கும் நீர் ஆதாரம்..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,553 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியில், தற்போதைய நீர்மட்டம் 82.20 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 90 மி.மீ. மழை பதிவானது.

கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாறில் தலா 80 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறில் 50 மி.மீ., கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், நீலகிரி மாவட்டம் குந்தாபாலத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.

கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணை நிரம்பியுள்ளதால், இன்னும் ஒரு வருடத்திற்கு கோவை மாவட்டத்திற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பவானி ஆற்றின் கரையோரம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மேற்கு மாவட்ட நீராதாரங்கள் எல்லாம் நிரம்பும் நிலையில் உள்ளது.

காவிரி பாய்ந்து வரும் மேட்டூர் அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. அணைத்து நீர் நிலைகளும் நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் திறக்கப்பட்டால், காவிரியும், பவானியும் கூடுதுறையில் ஒன்றாக இணைந்து திருச்சி  வரை வெள்ள பெருக்கெடுத்து  பாய்ந்து செழிக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

rain fall raised bhvani river beds


Loading...


Get Newsletter

Seithipunal