யாருக்கும் பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை .,சிம்புவின் சவாலுக்கு பதிலடி கொடுத்த அன்புமணி ராமதாஸ்.! வீடியோ உள்ளே .! - Seithipunal
Seithipunal


சர்க்கார் பட போஸ்டர் விவகாரமாக திரையுலகினரின் தரப்பு நியாயத்தை பாமக தலைவர் அன்புமணியிடம் விவாதம் செய்ய நான் தயார் என சிம்பு கூறியதற்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
 
விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இருந்தது.அதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய படம்

 விஜய் போன்ற பெரிய நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் மேலும் ஏற்கனவே விஜய் புகைப்பிடிப்பது போன்று நடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அன்புமணி தெரிவித்திருந்தார்

simbu க்கான பட முடிவு

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அதில் 'பாபா' முதல் 'சர்கார்' வரை இந்த புகைபிடிக்கும் விவகாரம் பிரச்சனையாக உள்ளது, இதற்கு முடிவு கட்ட ஒரு விவாதம் நடத்தினால் அதில் தான் பங்கேற்று திரையுலகினர் தரப்பு நியாயத்தை கூற தயாராக இருக்கிறேன்.

அன்புமணி அவர்களுக்கு சம்மதம் என்றால் இந்த விவாதம் நடத்தப்படும் தேதி, இடத்தை அவரே அறிவிக்கலாம் என்றும் சிம்பு கூறியுள்ளார்.

anbumani ramadoss க்கான பட முடிவு

இதற்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்து கூறியதாவது 
விஜய்யின்  உடல்நலம் கருதியே நான் அவ்வாறு கூறினேன். அவர் புகைப்பிடித்தால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படலாம்.அவரை பின்பற்றும் ரசிகர்களும் பாதிக்கப்படலாம். எனவே தான் இதுபோன்ற காட்சிகளை தவிர்க்குமாறு கூறினேன். எனக்கும் விஜய்க்கும் எந்தவித தனிப்பட்ட விரோதமும் இல்லை.

மேலும் சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை ,ஒருவேளை நடிகர் சங்கம் மூலம் நடிகர்கள் இயக்குனர்கள் இதை பற்றி விவாதம் செய்ய கேட்டால் அதற்கு நான் தயார் என்றும் கூறியுள்ளார்.
 

English Summary

anbumani ramadoss answered to simbu challenge


Loading...


Get Newsletter

Seithipunal