03 மணிநேரம் ஸ்தம்பித்துப் போன சென்னை.! திக்குமுக்காடிய பொதுமக்கள்!! சென்னையை புரட்டி போட்ட சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் பயங்கர காற்றுடன் மழை வெளுத்து வாங்கிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வேலைக்கு சென்று வீடு திரும்பிய மக்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழைப்பொழிவை தரும் தென்மேற்குப் பருவக்காற்று மீண்டும் வலுப்பெற்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

கடந்த மே மாதம் 29-ஆம் தேதி, தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கிவருகிறது. அதேபோல் கேரளா மாநிலத்தையும் இந்த மழை புரட்டி போட்டு உள்ளது. அம்மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.     

மேலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. தமிழகத்தை பொறுத்தவரையில் உதகை, கோவை, தேனி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.
 
தமிழகத்தின் முக்கியமான அணைகளின் அணைமட்டும் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 96 - 104 சதவிகிதம் வரை தென்மேற்குப் பருவமழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (11.07.2018) மாலை 6 மணி அளவில், சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு நிமிடம் கூட நிற்காமல் 03 மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதனால் வேலைக்கு சென்று வீடு திரும்பிய மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். 

இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து நெரிசலும் அதிகமானதால் ஒரு மணி நேரம் சென்னை ஸ்தம்பித்து போனது. மேலும், தமிழ்நாட்டில் பல பகுதியிகளில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

English Summary

03 hours heavy rain in chennai


Loading...


Get Newsletter

Seithipunal