சாமானியனும் இனி சச்சின் ஆகலாம்.. தமிழக வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்..? இங்கே அடித்தால் இந்திய அணிக்கே கேட்கும்..! - Seithipunal
Seithipunal


மூன்றாவது சீசன் சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி-20 கிரிக்கெட் தொடர், திருநெல்வேலியில் இன்று தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்- திருச்சி அணிகள் மோதின. நெல்லையில் இதுகுறித்து டிஎன்பிஎல் தலைமைச் செயலதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஊடக மேலாளர் ஆர்.என்.பாபா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எட்டு அணிகள்பங்கேற்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இறுதி ஆட்டம் உள்பட4 ஆட்டங்கள் சென்னையில் நடைபெறுகின்றன.

நெல்லை, திண்டுக்கல்லில் தலா 14 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நெல்லை தாழையூத்து சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்திலும், திண்டுக்கல்லில் நத்தம் என்பிஆர் கல்லூரிமைதானத்திலும், சென்னையில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் போட்டி நடைபெறுகிறது.

இத்தொடரில் காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அதனால் அந்தஅணிகளின் பெயரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணிகள் முறையே ஐட்ரீம்காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என்றபெயர்களில் களம் காணுகின்றன. இதுதவிர,வி.பி.திருவள்ளூர் அணியின் பெயர், வி.பி.காஞ்சி வீரன்ஸ் என மாற்றப்பட்டுள்ளது.

தினந்தோறும் இரவு 7.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரு ஆட்டங்கள் நடைபெறுவதால், பிற்பகல் 3.15 மணிக்கு ஓர் ஆட்டமும், இரவு 7.15 மணிக்கு மற்றொரு ஆட்டமும் தொடங்கும்.

இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும்அணிக்கு ரூ.1 கோடியும், இரண்டாவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பிடிக்கும்அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், எஞ்சிய 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

இத்தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என கூறினர்.

பேட்டியின் இடையே இந்திய கிரிக்கெட் வீரரும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனுமான அஸ்வின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தமிழக வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.

இங்குகிடைத்த அடித்தளத்தால்தான் சிலர், ஐபிஎல்போட்டியிலும், இந்திய அணியிலும் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளனர். உதாரணமாக வாஷிங்டன் சுந்தர், டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

தற்போது இந்திய அணிக்காக ஆடி வருகிறார். டிஎன்பிஎல் போட்டியால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்போது தமிழக அணிக்கு பெருநகரங்களைச் சேர்ந்த வீரர்களைவிட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களே அதிகம் தேர்வாகின்றனர், இவ்வாறு அவர்கள் கூறினர்.

English Summary

tnpl sports game started today


Loading...


Get Newsletter

Seithipunal