ஒரு ஆட்டம் ஜெயித்தால் போதும், தரவரிசையில் முதலிடம் இந்திய அணி தான்!. - Seithipunal
Seithipunal


 

 


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் தரவரிசைய பட்டியலில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரை அபாரமாக வென்றது.

இதனை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றால் சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடம் வரும். தற்போதைய நிலவரப்படி 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. 122 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும், 113 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன. 

English Summary

Indian cricket team will come in first place


Loading...


Get Newsletter

Seithipunal