ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவில் உருவான புதிய அணியும்! அவர்களின் புதிய தொழிலும்! போடப்பட்ட பூஜை! - Seithipunal
Seithipunal


தற்போதைய அதிமுக அரசு சொந்தமாக சேனல்கள் இல்லாமல் கட்சி சாராத சேனல்களை நம்பியுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அரசுக்கு எதிராகவும், தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக பிரபல தனியார் தொலைக்காட்சி அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டது.

இதனால் அடுத்தவர்களை நம்பாமல் சொந்தமாக நான்கு சேனல்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அம்மா 'டிவி' என்ற பெயருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், NewsJ, MusicJ, MoviesJ, and JTV என்ற பெயர்களில் சேனல்கள் ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல், இந்த சேனல்களுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி,  தங்கமணி என கொங்கு மண்டல அதிமுக தலைவர்களே முதலீட்டாளர்கள் என்பது தான் இங்கு விஷயமே!

எஸ்.பி.வேலுமணி  தனது சகோதரர் எஸ்.பீ.அன்பரசனை தனது பிரிதிநிதியாகவும், தங்கமணி அவரது மகனான தினேஷ் ஐ தனது பிரிதிநிதியாகவும், சி.வி.சண்முகம் அவரது அண்ணாவை தனது பிரிதிநிதியாகவும் நியமித்துள்ளார்கள். முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தனது பிரிதிநிதியாக சேலம் இளங்கோவனை நியமித்துள்ளார்.

சேனலின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எஸ்.வேலுமணி சகோதரனின் மகன் சுரேஷ் ஆவார். இந்த சேனல்களுக்கான உரிமங்களைப் பெறுவது  சிக்கலானதாகவும் தோன்றுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் ஏற்கனவே இருக்கும் சேனலை வாங்க முடிவு செய்துள்ளனர். 

இதில் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சேனல்களுக்கு நிகழ்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்குவது கொங்கு மண்டலத்தை சேர்ந்த நடிகர் சூர்யா என்பதாகவும் தகவல்கள் சமூக ஊடகங்களில்  வலம் வருகின்றது. இதில் பங்கு பெற்றவர்களில் CV சண்முகம் தவிர்த்து மற்ற அனைவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். 

இதற்கான பூஜை இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லாமல் இந்த தொழிலில் இறங்கியுள்ளதால் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தியில் உள்ளதாம்.  

English Summary

admk new team form and start media business for party


Loading...


Get Newsletter

Seithipunal