எந்த சந்தேகமும் வேணாம் "சிறுநீர் துறை" உங்களுக்குதான் ,ஹெச்.ராஜாவை பங்கமாய் கலாய்த்த தினகரன்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பாஜக கட்சியை பலப்படுத்த தங்களது திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்க சென்னை வந்த அமித்ஷா பாஜக தொண்டர்கள் முன் பேசினார். அவர் ஹிந்தியில் பேச, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அதை தமிழில் மொழி பெயர்த்து கூறினார். 

அப்போது, மைக்ரோ இர்ரிகேஷன்  என அமித்ஷா கூறியதற்கு சொட்டுநீர்ப்பாசனம் என சரியாக கூறாமல்  சிறுநீர் பாசனம்' என்று ஹெச்.ராஜா மொழி பெயர்த்தார். இதனை கேட்டுக்கொண்டிருந்த பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

      à®¹à¯†à®šà¯.ராஜாவுக்கு சிறுநீர் துறை - கலாய்த்த தினகரன் க்கான பட முடிவு
 
கடந்த 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். ஹெச்.ராஜா கூறியதை கிண்டலடித்து பல மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.

ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறை - கலாய்த்த தினகரன் க்கான பட முடிவு
 
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுகழகத்தின் தலைவரும்,ஆர்.கே நகர் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன்

“ தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நுண் நீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என நினைக்கிறேன். இதுதான் பாஜகவின் இன்றைய நிலை” என கிண்டலாக பேட்டியளித்தார்.

English Summary

dinakaran teasing h.raja for saying siruneer pasanam


Loading...


Get Newsletter

Seithipunal