மாநிலங்களவையில் இனி 22 மொழிகளில் உரையாற்றலாம்..!! தமிழ்மொழியில் பேச அனுமதியா ?. - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையில் வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி வழங்கி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இன்று புதன்கிழமை அறிவித்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள், அனைவரையும் தங்களின் தாய்மொழியில் பேசுமாறு அறிவுறுத்தி வருகிறார். மேலும் தாய்மொழியில் உரையாடும்போது ஒருவரின் சிந்தனை மேம்படும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, மாநிலங்களவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து இந்திய அரசியலமைப்பு பிரிவு 8-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி வழங்கி மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, இன்று அறிவித்தார்.

எனவே மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் தாய்மொழியில் பேசும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதற்காக மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை மாநிலங்களவையில் இந்த 22 மொழிகளில் தற்போது வரை ஆசாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 12 மொழிகளுக்கு ஏற்கனவே மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். 

இதையடுத்து தற்போது போதோ, மைதாலி, மணிப்பூரி, மராத்தி மற்றும் நேபாளி ஆகிய 5 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் மக்களவையில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

English Summary

Let's talk in 22 languages ​​in Rajya Sabha Permit to speak in Tamil language


Loading...


Get Newsletter

Seithipunal