முள்வேலியில் நடப்பது போல் பள்ளி செல்லும் மாணவர்களின் பரிதாப நிலை..! - Seithipunal
Seithipunal


குஜராத்தின் கேடா மாவட்டத்தில்அமைந்திருக்கும் நைகா-பேராய் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு இடையே கால்வாய் ஒன்று ஓடுகின்றது.இந்த கால்வாயில் தடுப்பணையுடன் கூடிய ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது.அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த பாலத்தை கடந்துதான் கால்வாயின் மறுகரைக்கு செல்ல முடியும். இந்த பாலத்தை விட்டால் 10 கிலோ மீட்டர் தொலைவுகொண்ட சுற்றுப்பாதையில்தான் செல்ல வேண்டும்.அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடைந்துவிட்டது. 

இருந்தபோதிலும் வேறு வழியின்றி பாலத்தில் பொறுத்தப்பட்டடுள்ள ஷட்டரை பிடித்து தொங்கியபடி பொதுமக்கள் மறுகரைக்கு செல்கின்றனர். குறிப்பாக பள்ளி  குழந்தைகள் உயிரைப் பணயம் வைத்து இந்த பாலத்தைக் கடந்து செல்கின்றனர். ஷட்டரின் உயரம் கூட இல்லாத மாணவர்களுக்கு, பெரியவர்கள் உதவி செய்கின்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

எனவே இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகள் அதிக அக்கறை எடுத்து, உடனடியாக பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் அங்கு தொடர்ந்து மழை பெய்வதால் பாலம் சீரமைப்பு பணியை உடனே தொடங்க முடியவில்லை என்றும், விரைவில் பணி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

English Summary

bridge damage in Gujarat so village people was affected


Loading...


Get Newsletter

Seithipunal